×

ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்

சென்னை: கடும் வெயில் காரணமாக ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் தங்கியிருக்க சமந்தா முடிவு செய்துள்ளார். சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு உள்ளது. உடலில் சோர்வு காரணமாக அடிக்கடி மயங்கி விடுவார். அதேபோல் அவருக்கு தோல் அலர்ஜியும் உள்ளது. சூரிய வெளிச்சத்தில் நின்றால் அவரது தோலில் சிவப்பு நிறத்தில் பருக்களைப்போல் உண்டாகிவிடும். இந்த பாதிப்புகள் காரணமாக படப்பிடிப்புகளுக்கு பிரேக் கொடுத்திருக்கிறார். கடந்த மாதமே அவர் வெளிநாட்டுக்கு பறந்துவிட்டார்.

அமெரிக்காவில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து கனடாவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து லண்டன், ஆஸ்திரியா நாடுகளுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளாராம். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கடும் வெயில் நிலவுகிறது. ஜூன் மாதம் வரையும் வெயிலின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஜூன் வரை பல்வேறு நாடுகளில் தங்கியிருக்க சமந்தா முடிவு செய்துள்ளாராம். அதன் பிறகே அவர் நாடு திரும்பி, படப்பிடிப்புகளில் பங்கேற்பாராம்.

The post ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samantha ,Chennai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இஸ்ரேல் தாக்குதலுக்கு திரிஷா, சமந்தா உள்பட திரையுலகம் கண்டனம்