×

சினிமாவை பிரித்து பார்ப்பதில்லை: அஞ்சலி

சென்னை: சினிமாவை மொழியால் எப்போதும் நான் பிரித்து பார்ப்பதில்லை என்கிறார் அஞ்சலி. தெலுங்கில் விஷ்வக் சென் ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள படம் ‘கேங் ஆஃப் கோதாவரி’. இப்படம் வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. இது பற்றி அஞ்சலி கூறியது: கஷ்டப்பட்டு நடித்த படம் ரிலீசாகும்போது, அதற்கான சந்தோஷம் தனி அலாதியானது. அதுவே அந்த படம் வெற்றி பெற்றால், சந்தோஷம் பல மடங்கு அதிகரித்துவிடும். தோல்வி அடைந்தால் சில நாட்கள் கஷ்டமாகவே இருக்கும்.

தெலுங்கில் ‘கேங் ஆஃப் கோதாவரி’க்கு பிறகு ஷங்கர் சார் இயக்கத்தில் ராம் சரணுடன் நடித்துள்ள ‘ேகம் சேஞ்சர்’ வெளியாகும். தமிழில் ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் நடித்திருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் ஜூலையில் திரைக்கு வரும். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்தாலும் சினிமாவை மொழியால் பிரித்து பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. எல்லாமே சினிமாதான். எல்லாமே நடிப்புதான். அப்படித்தான் ஒவ்வொரு கேரக்டரையும் நான் பார்க்கிறேன். அதில் ஈடுபாடும் காட்டுகிறேன். ஒரேவித உழைப்பையும் தருகிறேன். இவ்வாறு அஞ்சலி கூறினார்.

The post சினிமாவை பிரித்து பார்ப்பதில்லை: அஞ்சலி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anjali ,Chennai ,Vishwak Sen ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா: சினிமா விழாவில் பரபரப்பு