×

மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா: சினிமா விழாவில் பரபரப்பு

ஐதராபாத்: ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது. விஸ்வக் சென் நடிப்பில் கிருஷ்ண சைதன்யா இயக்கியுள்ள படம் ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’. இதில் அஞ்சலி, நேஹா ஷெட்டி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா அங்கே நின்று கொண்டிருந்த அஞ்சலி, நேஹா ஷெட்டி இருவரையும் தள்ளி நிற்க சொன்னார். இருவரும் சற்று தள்ளி நின்றனர். ஆனால் அதுபோதாது என்பதுபோல், தனது அருகில் நின்ற அஞ்சலியை பிடித்து பாலகிருஷ்ணா தள்ளினார். ஒரு நிமிடம் தடுமாறிய அஞ்சலி, பின்னால் விழ இருந்தார். உடனே அவரை கீழே விழாமல் நேஹா ஷெட்டி தாங்கிப் பிடித்தார். இதைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விழா மேடை என்பதால் அஞ்சலி சிரித்தபடியே இந்த சம்பவத்தை சமாளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். அஞ்சலி அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிரித்தாலும், மேடையில் பாலகிருஷ்ணா இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் அப்போது அவர் போதையில் இருந்தார் என்றும் நெட்டிசன்கள் கடுமையாக அவரை சாடியுள்ளனர்.

The post மேடையில் அஞ்சலியை தள்ளிவிட்ட பாலகிருஷ்ணா: சினிமா விழாவில் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Balakrishna ,Anjali ,Hyderabad ,Krishna Chaitanya ,Vishwak Sen. Anjali ,Neha Shetty ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலகிருஷ்ணா தள்ளிவிட்ட விவகாரம்; நள்ளிரவில் அஞ்சலி போட்ட டிவிட்