×

குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

குன்னூர்: குன்னூர் பழக்கண்காட்சி நாளை துவங்குகிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. கோடை விழாவையொட்டி,  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி நாளை(28ம் தேதி) துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி சிம்ஸ் பூங்காவில் நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத் துறை சார்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பூங்காவில் 22 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான பழங்களினாலான வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பழக்கண்காட்சியையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகளின் வர உள்ளதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது….

The post குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Gunnur ,Gunnur Sims ,Park ,Kunnur ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...