- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- அமைச்சர்
- பெரியகருப்பன்
- சென்னை
- கூட்டுறவு
- கே.ஆர்.பெரியகருப்பன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2026ம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு ஆகியவற்றுடன் 3000 ரொக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார்.
அதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சிறப்பாக வழங்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்புகளை சிறந்த முறையில் வழங்கியதற்காக நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்யும் விதமாக கடந்த காலங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.50 பைசா வீதம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மேற்படி திட்டத்தை எவ்வித புகாருக்கும் இடமின்றி, செவ்வனே செயல்படுத்தியதாகவும் அவ்வகையில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.3 என்ற வகையில் ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு முதல்வர் கேட்டுக் கொண்டார். நியாய விலைக் கடை பணியாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிறந்த முறையில் வழங்கியதற்காக, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.3 வீதம் வழங்க ஆணையிட்டுள்ளார்.
மேலும் இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.6,47,43,054ஐ வழங்க நிருவாக அனுமதி அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் நியாயவிலைக்கடை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்றி உள்ளார். கூட்டுறவு துறையின் சார்பிலும், நியாய விலைக் கடை பணியாளர்கள் சார்பிலும் தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
