×

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரு:நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்கனவே உள்ளபடியே தொடரும் என்றும் நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் கடந்த 29ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவையில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: வேளாண் சட்ட விவகாரம் அரசியலாக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை பரப்பாதீர்கள். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய சட்டங்களின் மூலம் மண்டி அமைப்பு நவீனமயமாக்கப்படும். அது  மட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதார விலையும் இப்போது போல் எப்போதும் தொடரும். 80  கோடி மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் வழங்குவதும் தொடரும்.  விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண,  சிறு விவசாயிகளுக்கு உதவவே, வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு  வரப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று  எதிர்க்கட்சிகளும் முன்பு வாதிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  கூட, `நாட்டின் கொள்முதல் அமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று  கூறியுள்ளார். வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள  திருத்தங்கள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு புரியவைக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.  பேச்சுவார்த்தை நடத்த அனைத்து கதவுகளும்  திறந்தே உள்ளன. போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு  காண வேண்டும். இந்த சபையில் இருந்து அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு  வரும்படி அழைக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும். நாட்டை  பின்னோக்கி கொண்டு செல்ல கூடாது. எதிர்க்கட்சியினர், அரசு, போராடும்  விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.  அவற்றில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் விவசாயிகளுக்கு உதவுகிறதா என்று  பார்க்க வேண்டும். காலம் காத்திருக்காது. மாறாத நிலையில் நாம் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம். அதனால், ஒவ்வொரு சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட  வேண்டும். விவசாயிகள் போராடுவதற்கு உரிமை உள்ளது. ஆனால் முதியவர்கள் கஷ்டப்படுவது முறையல்ல. அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். நமக்கு அந்நிய நேரடி முதலீடு தேவை. ஆனால் தற்போது புதிய அந்நிய முதலீடுகள் வருகின்றன. அவை, அழிக்கும் கருத்தியலை கொண்டவை (விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளிநாட்டு பிரபலங்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்ததை சூசகமாக குறிப்பிட்டார் பிரதமர் மோடி). அவைகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.அனைத்து போராட்டங்களிலும் போராட்டத்தையே ெதாழிலாக கொண்டிருக் கும் பலரை காண முடிகிறது.  சீக்கியர்கள் சமூகம் நாட்டிற்கு செய்த பங்களிப்பை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. குரு சாகிப்பின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றது. அவர்களை பற்றி தரக்குறைவாக பேசுவதோ அல்லது அவர்களை தவறாக வழிநடத்துவதாலோ, நாட்டிற்கு எவ்வித பயனும் இல்லை.  கொரோனா தொற்றின் போது, நாட்டின் எல்லையை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு வீரமும் பயிற்சியும் பெற்ற நம் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும். எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் எவ்வித தளர்வும் கொண்டு வரப்படாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.5133 முறை அத்துமீறிய பாக். ராணுவம்மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பதிலில், ‘‘இந்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி வரை எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் அத்துமீறி 299 முறை துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. 2019ம் ஆண்டில் 3,233, 2020ம் ஆண்டில் 5,133 அத்துமீறி தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த ஆண்டு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் மட்டும் 46 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்’’ என்றார்.பிரதமர் அழைப்பை ஏற்றனர் விவசாயிகள்விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி பேச்சுவார்த்தைக்கு நேற்று அழைப்பு விடுத்த நிலையில், அதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய சங்கத்தின் தலைவர் சிவ் குமார் கக்கா கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான தேதியை முடிவு செய்து அறிவியுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் தேவை பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகெய்த் கூறுகையில், “வெறும் உறுதிமொழியிலேயே நாட்டை வழிநடத்திவிட முடியாது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் தேவை. அதற்கான சட்டம் இயற்றுகிறோம் என ஒருமுறை கூட பிரதமர் மோடி கூற மறுக்கிறார்’’ என்றார்.எதிர்க்கட்சிகள் வெளிநடப்புஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அப்போது காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்கள் புறக்கணித்து வெளியேறினர். பின்னர் நிருபர்களை சந்தித்த திமுக எம்பி திருச்சி சிவா கூறுகையில்,” மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை உப்பு சப்பு இல்லாத ஒன்றாக இருந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்த பிரச்னையைக் சிறிதளவும் கருத்தில் கொள்ளாமல் தனக்கென்ன என்று சிரித்து கொண்டே உரை நிகழ்த்தினார். நாட்டுமக்களின் பிரச்சனையை புரிந்துகொள்ளாமல் ஒரு பிரதமர் இருக்கிறாரே என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். மக்களை மதிக்காத பிரதமராக மோடி செயல்படுகிறார். எதிர்க்கட்சிகளின் குரல்கள் இரு அவைகளிலும் அடக்கப்படுகின்றன’’ என்றார்.மார்ச்சில் 17 ரபேல் விமானங்கள்மாநிலங்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “நாட்டிற்கு இதுவரை 11 ரபேல் போர் விமானங்கள் வந்துள்ளன. மார்ச்சில் மேலும் 17 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன. ஒப்பந்தம் செய்து கொண்டபடி 2022ம் ஆண்டு ஏப்ரலுக்குள் அனைத்து ரபேல் விமானங்களும் வந்துவிடும்” என்றார்….

The post டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரு:நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி appeared first on Dinakaran.

Tags : Delhi ,PM Modi ,Parliament ,New Delhi ,Union government ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...