ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுருதாரக சீனிவாசலு மற்றும் கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், சிறப்பு ராகு-கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே பொன்னாடை போர்த்தப்பட்டது. மேலும், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசாக சுவாமி புகைப்படமும் வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சரவையில் எம்எல்ஏ ரோஜாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….
The post ஸ்ரீகாளஹஸ்தியில் நடிகை ரோஜா தரிசனம் appeared first on Dinakaran.
