×

ரஜினியின் புதிய தோற்றத்துடன் தொடங்கியது ‘தலைவர் 170’

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் நடிக்கும் நடிகர். நடிகைகளின் பெயர்களை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர்.

தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பன்மொழி கலைஞர்களும் நடிக்கின்றனர். இந்த நிலையில் இன்று இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக தயாரிப்பு தரப்பு, ரஜினியின் புதிய தோற்றத்துடன் அறிவித்துள்ளது. மேலும், இந்த முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்குகி உள்ளது. இதற்காக நேற்று திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார் ரஜினி. அப்போது இந்த படம் நல்ல கருத்துள்ள கமர்ஷியல் படமாக, பிரமாண்டமாய் உருவாவதாக அவர் தெரிவித்தார்.

The post ரஜினியின் புதிய தோற்றத்துடன் தொடங்கியது ‘தலைவர் 170’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rajini ,Jailer ,Rajinikanth ,Gnanavel ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்