×

தேர்தல் வாக்குறுதியின்படி, 3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் : கோவா முதல்வர் உறுதி!!

பனாஜி:  கோவாவில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்  என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக முதல்வராக பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் தரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கொன்கனி மொழியில் பிரமோத் உறுதி மொழி ஏற்றார். தொடர்ந்து அமைச்சர்களாக 8 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.இந்த நிலையில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையில், தாங்கள் அட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3  கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தோம். தற்போது அதனை நிறைவேற்றும் விதமாக வரும் புதிய நிதியாண்டு முதல் 3 ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச கேஸ் சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்,’ எனக் குறிப்பிட்டுள்ளார். …

The post தேர்தல் வாக்குறுதியின்படி, 3 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் : கோவா முதல்வர் உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Goa CM ,Panaji ,Goa ,Dinakaran ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...