×

யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும்: தமிழிசைக்கு செங்கோட்டையன் பதிலடி

 

கோவை: அரசியல் களத்தில் இருக்கிறோமா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும் என தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எஸ்ஐஆர் குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும். ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை சொல்கின்றனர்.

தவழும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம்தான், தன்னுடைய தன்னாட்சி நடத்துவார்கள். தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த பொதுக்கூட்டம் குறித்து இன்று மாலை அவரிடம் (விஜய்யிடம்) பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம். எங்களைப் பொறுத்த வரையிலும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும்’’ இவ்வாறு அவர் கூறினார். தமிழக வெற்றி கழகம் களத்தில் இல்லாத கட்சி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு, ‘‘அது அவருடைய கருத்து. களத்தில் இருக்கிறோமா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும் என்றார்.

 

Tags : Sengkottiyan ,Goa ,Sengotthayan ,Chief Coordinator ,Daveka Executive Committee ,CHENGOTTAYAN ,TAMIL VICTORY CLUB ,COMMITTEE ,KOWAI AIRPORT ,TOLD REPORTERS ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...