×

மீண்டும் தெலுங்கில் நடிக்கும் ஷாம்

சென்னை: தமிழில் ‘12 பி’ படத்தில் அறிமுகமான ஷாம், தொடர்ந்து ‘இயற்கை’, ‘6 மெழுகுவர்த்திகள்’ உள்பட சிறந்த கதையம்சம் கொண்ட பல படங்களில் நடித்தார். தனது 20 வருட திரையுலக பயணத்தில் பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘வாரிசு’ படத்தில் விஜய் சகோதரர் வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் மற்றும் இரண்டு படங்களிலும் நடித்து வரும் ஷாம், தெலுங்கில் ‘சாஹோ’ இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் உருவாகும் படத்தில், ஹீரோ பவன் கல்யாணுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மீண்டும் தெலுங்கில் நடித்தாலும் ஐதராபாத்தில் குடியேற விரும்பாத அவர் சென்னையிலேயே வசிக்கிறார்.

The post மீண்டும் தெலுங்கில் நடிக்கும் ஷாம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shaam ,CHENNAI ,Sham ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்