×

கேன்ஸ் பட விழாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவை வெளிப்படுத்திய மலையாள நடிகை: சமூக வலைத்தளத்தில் பரபரப்பு

கேன்ஸ்: பிரான்ஸில் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 7 படங்கள் திரையிடப்பட்டன. அதில் மலையாளத்தில் உருவான ஆல் வி இமேஜின் ஆஸ் லைட் என்ற படமும் ஒன்று. இந்த படம் திரையிடப்பட்டதும், வௌிநாட்டு கலைஞர்கள் படம் பார்த்துவிட்டு கைதட்டி பாராட்டுகளை தெரிவித்தனர். பாயல் கபாடியா இயக்கிய இப்படத்தில் கனி குஸ்ருதி, ஹிருது ஹாரூன் நடித்துள்ளனர். இப்பட ஹீரோயின் கனி குஸ்ருதி, கேன்ஸில் கலந்துகொண்டபோது, தன்னிடம் தர்பூசணி வடிவிலான கைப்பையை வைத்திருந்தார். புகைப்படக் கலைஞர்கள் தன்னை நெருங்கும்போது, அந்த கைப்பையை தூக்கிப் பிடித்து காட்டினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தர்பூசணி சின்னம், பாலஸ்தீன மக்களின் போராட்ட சின்னமாகும். ேமலும் தங்களது ஒற்றுமையின் அடையாளமாகவும் அதை அம்மக்கள் பிரதிபலிக்கின்றனர். இதற்கு மற்றொரு காரணம், அந்நாட்டின் கொடி, தர்பூசணி நிறத்தில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதை வெளிப்படுத்தவும் அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் அதிகம் குவியும் கேன்ஸ் பட விழாவில் தனது பாலஸ்தீன ஆதரவை தெரியப்படுத்துவும்தான் கனி குஸ்ருதி இப்படி நடந்து கொண்டார் என கூறப்படுகிறது. அவரது இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். ‘ஆண் நடிகர்களுக்கு இல்லாத துணிச்சல் ஒரு பெண்ணுக்கு இருக்கிறது’. ‘இந்தியாவின் நிஜ முகத்தை கனி காட்டியிருக்கிறார்’. ‘இதுதான் வீரம் என்பது’ என்றெல்லாம் அவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ‘வெல்டன் கனி’ என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆனது.

 

The post கேன்ஸ் பட விழாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவை வெளிப்படுத்திய மலையாள நடிகை: சமூக வலைத்தளத்தில் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Palestine ,Cannes Film Festival ,Cannes ,Cannes International Film Festival ,France ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கேன்ஸ் திரைப்பட விழா விருதுகளை குவித்த இந்திய திரையுலகம்