×

‘96’ பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் மெய்யழகன்

சென்னை: கார்த்தி நடிப்பில் ‘96’ பட டைரக்டர் பிரேம்குமார் இயக்கும் படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நேற்று கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இப்படத்தில் இன்னொரு மிகமுக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷ்னி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன் நடிக்கிறார்கள்.

இப்படத்தை, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர்ஹிட்டான ‘96’ படத்தை இயக்கிய ச. பிரேம் குமார் இயக்குகிறார். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ‘96’ படம் மூலம் மெகா ஹிட்டான பாடல்களை தந்த இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்துக்கும் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங் வேலைகள் நடந்து வருகிறது. தயாரிப்பு: ஜோதிகா மற்றும் சூர்யா இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன். ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு, எடிட்டிங்: ஆர்.கோவிந்தராஜ்.

The post ‘96’ பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Karthi ,Premkumar ,Chennai ,Arvindsamy ,Rajkiran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கிண்டல் செய்தவர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்