×

அடுத்த காதலுக்கு தயாராகிறாரா ஸ்ருதிஹாசன்?: அவரே அளித்த பதில்

மும்பை: கவுஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டாட்டூ கலைஞரை தீவிரமாக காதலித்து வந்த ஸ்ருதிஹாசன், மும்பையிலுள்ள தனி வீட்டில் அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையை மேற்கொண்டு வந்தார். அவருடன் இணைந்து நெருக்கமாக போஸ் கொடுத்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த அவர், ‘திருமணம் எப்போது?’ என்ற கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் தவிர்த்து வந்தார். ஆனால், திடீரென்று அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்பட்டதை தொடர்ந்து, தங்கள் காதலை பிரேக்அப் செய்துகொண்டதாக அறிவித்தனர். சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காதலனின் போட்டோக்களை நீக்கி விட்ட ஸ்ருதிஹாசனிடம், ‘காதலனைப் பிரிந்துவிட்டீர்கள் என்பது நிஜமா?’ என்று ரசிகர்கள் கேட்டனர்.

மேலும் ஒரு ரசிகர், ‘அடுத்த காதலுக்கு தயாராகி விட்டீர்களா?’ என்றும் கேட்டார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘இதற்கு பதில் சொல்வது எனக்கு மகிழ்ச்சியான விஷயம் இல்லை என்றாலும் கூட, ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் இப்போது சிங்கிள்தான். மற்றொருவருடன் மிங்கிளாக தயாரில்லை. என்னுடைய வேலையில் அதிக கவனம் செலுத்தி சந்தோஷமாகவே இருக்கிறேன்’ என்று, அடுத்த ரிலேஷன்ஷிப்புக்கு ரெடியில்லை என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

The post அடுத்த காதலுக்கு தயாராகிறாரா ஸ்ருதிஹாசன்?: அவரே அளித்த பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags :
× RELATED சாய் தன்ஷிகா நடிக்கும் சட்டம் என் கையில்