×

சிரஞ்சீவி தங்கை வேடத்தில் ஆஷிகா ரங்கநாத்

ஐதராபாத்: தெலுங்கில் 18 வருட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா நடிக்கும் படம், ‘விஸ்வம்பரா’. இதை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். சிரஞ்சீவி நடிக்கும் 156வது படமான இதை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. ரூ.200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் நடிப்பது குறித்து திரிஷா கூறுகையில், ‘18 வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவியுடன் இணைந்து பணியாற்றுவதை மிகப் பெருமையாக நினைக்கிறேன்’ என்றார்.

முன்னதாக 2006ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘ஸ்டாலின்’ என்ற படத்தில் சிரஞ்சீவியும், திரிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். பேண்டசி திரில்லர் பாணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ படத்தில், முக்கியத்துவம் கொண்ட இரட்டை வேடங் களில் திரிஷா நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரியும், சிரஞ்சீவியின் சகோதரிகளாக சுரபி, இஷா சாவ்லா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் வரும் 2025 ஜனவரி 10ம் ேததி திரைக்கு வருகிறது. இந்நிலையில், சிரஞ்சீவியின் சகோதரி வேடத்தில் ஆஷிகா ரங்கநாத் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. கன்னட நடிகையான இவர், தமிழில் அதர்வா முரளி ஜோடியாக ‘பட்டத்து அரசன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

 

The post சிரஞ்சீவி தங்கை வேடத்தில் ஆஷிகா ரங்கநாத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ashika Ranganath ,Chiranjeevi ,HYDERABAD ,THIRISHA ,Mallidi Vasishda ,UV Creations ,Shiranjeevi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ரோஜா இதழ்களால் பவன் கல்யாணுக்கு வரவேற்பு அளித்த சிரஞ்சீவி குடும்பம்..!!