×

உக்ரைனில் காயமடைந்த மாணவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: உக்ரைனில் காயமடைந்த மாணவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லி அருகே உள்ள சத்தர்பூரை சேர்ந்த ஹர்ஜோத் சிங் என்ற அந்த மாணவர் கீவ் நகரில் தங்கி படித்து வந்துள்ளார். தனது நண்பர்களுடன் கீவ் பகுதியில் இருந்து லிவிவ் நகருக்கு ஒரு காரில் சென்ற போது அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் நிலையில்,தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனது தோளில் தோட்டா நுழைந்தது. அவர்கள் (மருத்துவர்கள் ) என் மார்பில் இருந்து ஒரு தோட்டாவை வெளியே எடுத்தனர். என் கால் முறிந்தது. நான் தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, என்னை லிவிவ் நகருக்கு அழைத்துச் செல்வதற்கான வசதியை வழங்க முடியுமா என்று கேட்டேன். என்னால் நடக்க முடியாது. நான் அதிகாரிகளுக்கு போன் செய்து கொண்டே இருந்தேன்.ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இன்னும் பல இந்திய மாணவர்கள்  கீவ்வில் சிக்கியுள்ளனர். தூதரகம் கீவ்வில் உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும். என்ன நடந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய ஒரே செய்தி. நல்லதை மட்டுமே நம்புவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைனில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங்கின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக உக்ரைன் மீது போர் நடத்தி வந்த ரஷ்யா, திடீரென உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. …

The post உக்ரைனில் காயமடைந்த மாணவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government ,Ministry of Foreign Affairs ,New Delhi ,Ministry of External Affairs ,Ukraine ,Delhi ,Dinakaran ,
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...