×

அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு; மாஜி முதல்வரின் மனு தள்ளுபடி: ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவு


புதுடெல்லி: கடந்த ஜனவரி 31ம் தேதி ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் வழக்கில் இருந்து இடைக்கால ஜாமீன் கேட்டு ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இருப்பினும் இடைப்பட்ட காலத்திற்குள் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை வழங்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு; மாஜி முதல்வரின் மனு தள்ளுபடி: ஜார்கண்ட் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : chief minister ,Jharkhand ,New Delhi ,Jharkhand Mukti Morsa Party ,Hemant Soran ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...