×

நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்: குருவாயூர் கோயிலில் நடந்தது


திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நடிகை பார்வதியின் மகள் மாளவிகா ஜெயராம். இவருக்கும், ஐநா முன்னாள் அதிகாரியான பாலக்காட்டைச் சேர்ந்த கிரீஷ் மேனன் மற்றும் வல்சா தம்பதியின் மகன் நவநீத் கிரீஷுக்கும் கடந்த ஜனவரி மாதம் கூர்கில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நவநீத் கிரீஷ் இங்கிலாந்தில் சாட்டர்டு அக்கவுண்டன்டாக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் அவர்களது திருமணம் குருவாயூர் கோயிலில் வைத்து இன்று காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, அவரது மனைவி ராதிகா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அதன் பிறகு திருச்சூரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட மலையாள நடிகர், நடிகைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்: குருவாயூர் கோயிலில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Jayaram ,Malavika ,Guruvayur Temple ,Thiruvananthapuram ,Malavika Jayaram ,Parvati ,Aina officer ,Greesh Menon ,Palakata ,Navaneeth Greesh ,Valsa ,
× RELATED ஓடிடியில் வெளியானது ஜெயராம், மம்மூட்டி நடிப்பில் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்‘