×

மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ்

சென்னை: பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர், தினேஷ். அப்படம் வெளியான பிறகு அவரது பெயருடன் ‘அட்டகத்தி’ சேர்ந்துகொண்டது. பிறகு ‘குக்கூ’, ‘திருடன் போலீஸ்’, ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’, ‘விசாரணை’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்களில் மாறுபட்ட கேரக்டரில் நடித்திருந்த அவர், தற்போது ‘ஜே பேபி’, ‘கருப்பு பல்ஸர்’, ‘லப்பர் பந்து’, அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘தண்டகாரண்யம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்காக தன் கெட்டப்பை மாற்றியுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுகிறது. தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி நடிக்கும் ‘தங்கலான்’ என்ற படத்தை பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார்.

The post மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dinesh ,Pa. Ranjith ,Chennai ,Attakathi ,Press Tamil 1 ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி