×

ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான்

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து ‘காட்ஃபாதர்’ படத்தை பார்த்தனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகின்றன.

மேலும் நவீன தொழில்நுட்பம் மூலம் கமல்ஹாசனின் வயதை குறைத்துக் காட்டும் பணிகளில் இயக்குநர் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு சென்ற அவர்கள், ‘காட்ஃபாதர்’ ஹாலிவுட் படத்தை கண்டு ரசித்தனர். மேலும் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வென்ற புகைப்படங்களை கமலும் ரஹ்மானும் பார்த்தனர். இதுதொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

The post ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,AR Rahman ,Oscar Museum ,Los Angeles ,Los Angeles, USA ,Shankar ,Kajal Aggarwal ,Rahul Preet Singh ,Siddharth ,SJ Suriya ,Priya Bhavani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...