- அதிதி சங்கர்
- சிவகார்த்திகேயன்
- யோகி பாபு
- மைஷ்கின்
- சரிதா
- மடோன் அஸ்வின்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், ‘மாவீரன்’. இதில் அவரது ஜோடியாக ‘விருமன்’ அதிதி ஷங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, மிஷ்கின், சரிதா நடித்துள்ளனர். ‘மண்டேலா’ மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். அதிதி சங்கர் பத்திரிகையாளர் வேடம் ஏற்றுள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘அதிதி ஷங்கர் மிகவும் சுறுசுறுப்பான ஒரு நடிகை. படப்பிடிப்பில் அவர் இருந்தாலே உற்சாகமாக இருக்கும். ஆனால், கேமரா முன் சென்றுவிட்டால் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார். டேக் ஓகே ஆன அடுத்த நொடியில் அதிதியாக மாறி கலகலப்பாகப் பேசுவார்.
அதிதி போன்ற உற்சாகமான நடிகைகளைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். நண்பர்கள் சிலர், அதிதி மூலமாக ஷங்கர் படத்தில் நடிக்கலாமே என்று கிண்டலடிப்பார்கள். நானும் அதிதியிடம் இதுகுறித்து ஜாலியாகப் பேசியிருக்கிறேன். அதற்கு அவர், ‘வீட்டில் என் தந்தை சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார். குடும்பம் மற்றும் எங்களின் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவார். நாங்களும் அவரிடம் சினிமா பற்றி பேசுவது இல்லை. படம் வெளியானதும் நேரடியாக படத்தைச் சென்று பார்ப்போம்’ என்றார். ஷங்கர் சார் படத்தில் நடிக்கும் ஆசை எல்லா நடிகர்களுக்கும் உண்டு.
அதுபோல் எனக்கும் இருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது நடிப்பேன். ‘மாவீரன்’ படத்தில் பத்திரிகைகளுக்கு படக்கதை வரையும் ஓவியராக நடித்துள்ளேன். நான் வரையும் படக்கதையின் தலைப்புதான் ‘மாவீரன்’. இதில் எனது பெயர் சத்யா. இப்படத்தில் நான் ரஜினி சார் போன்று தோற்றம் அளிப்பதாகவும், சுறுசுறுப்பாக இருப்பதாகவும் சரிதா சொன்னார். அதை நான் ஏற்கவில்லை என்றாலும், அவர் சொன்ன விஷயம் மகிழ்ச்சி அளித்துள்ளது. ரஜினி, கமல் ஆகியோரைப் பார்த்து வளர்ந்தவன் நான். இப்போது ரஜினி தலைப்பில் நடிக்கிறேன். கமல் தயாரிப்பில் நடிக்கிறேன். இது என் பாக்கியம்’ என்றார்.
The post சிவகார்த்திகேயனுக்கு சிபாரிசு செய்த அதிதி ஷங்கர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.