×

5 முருக பக்தர்களின் கதை படமாகிறது

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் இயங்கி வந்த ஜெ. எஸ். கே. கோபி இன்று ஒரு முழு நேர முருக பக்தர். முகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு முருகர் குறித்த ஒரு திரைப்படத்தையும் ஜெயம் கோபி தயாரிக்க உள்ளார். ஐந்து முருக பக்தர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக உள்ள இந்த திரைப்படம் முருக பக்தி குறித்த விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் இடம் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் என்கிறார் ஜெயம் கோபி.

The post 5 முருக பக்தர்களின் கதை படமாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Muruga ,J. ,S. K. Gopi ,Mugan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாய புத்தகம் விமர்சனம்