×

நடிகர் மோஹனுடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது: நடிகை வனிதா!

சென்னை: 80’s காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகர் மோகன், தற்பொழுது ஹரா என்ற படம் நடித்து வருகிறார். தாதா 87, பவுடர் படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ அடுத்து மோஹனை வைத்து ஹரா என்ற படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மோகன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார். இவர்கள் தவிர யோகிபாபு, சாருஹாசன் நடிக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தில் வனிதாவும் இணைந்திருக்கிறார். வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மோகனுடன் இணைந்து பணியாற்றுகிறவராகவும், அவரது நண்பராகவும் வனிதா நடிக்கிறார்.

மோகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர், “நான் மோகனின் தீவிரமான ரசிகை. அவருடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

The post நடிகர் மோஹனுடன் இணைந்து நடிப்பதன் மூலம் எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது: நடிகை வனிதா! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : mohan ,vanita ,Chennai ,Vijay Shri ,Hara ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சம்மரை சமாளிப்போம்…