×

நடிகர் பிருத்விராஜ்-க்கு காலில் காயம்: இன்று அவருக்கு அறுவை சிகிச்சை

திருவனந்தபுரம்: விளையாத் புத்தா என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் பிருத்விராஜ்-க்கு காலில் காயம் ஏற்பட்டது. மரையூர் என்ற இடத்தில் நேற்று படத்தின் ஷூட்டிங் நடந்தபோது சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. சண்டைக் காட்சிக்காக ரொம்பவே ரிஸ்க் எடுத்து நடித்தார் பிருத்வி. உயரமான இடத்தில் பிருத்வி தொங்கியபடி சண்டை போடும் காட்சி ஒன்று எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டது.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பட யூனிட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இன்று அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. 2 – 3 மாதங்கள் வரை அவருக்கு ஓய்வு தேவை என கூறப்படுகிறது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

The post நடிகர் பிருத்விராஜ்-க்கு காலில் காயம்: இன்று அவருக்கு அறுவை சிகிச்சை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prithviraj ,Thiruvananthapuram ,Marayur ,Prithvi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!