×

கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் பொறுப்பேற்பு

மதுரை ஆக. 3: கத்தோலிக்க திருச்சபையின், மதுரை உயர்மறை மாவட்ட புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து நேற்று பொறுப்பேற்றார். கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்ட பேராயராக இருந்த அந்தோணி பாப்புசாமி, கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பாளையங்கோட்டை ஆயராக இருந்த அந்தோணி சாமி சவரிமுத்து, மதுரை உயர்மறை மாவட்டத்தின் 7வது பேராயராக, கத்தோலிக்க திருச்சபையின் உலகளாவிய தலைவர் போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து பொறுப்பேற்பு விழா நேற்று மதுரை, ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. முன்னதாக ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்திலிருந்து பேராயர்கள் தேர் பவனியாக அழைத்து வரப்பட்டனர்.போப்பாண்டவரின் இந்திய பிரதிநிதியாகிய ஜியோ போல்டோ ஜெரல்லி, புதிய பேராயரிடம் செங்கோல் வழங்கி பொறுப்பை ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து மதுரை உயர்மறை மாவட்ட குருக்கள் புதிய பேராயரிடம் ஆசி பெற்றனர்.

The post கத்தோலிக்க திருச்சபையின் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Catholic Church ,Madurai Archdiocese ,Archbishop ,Madurai ,Anthony Savarimuthu ,Anthony Pappusamy ,Palayankottai… ,Archdiocese ,Dinakaran ,
× RELATED கான்கிரீட் வீடு கட்டும் பணி தில்லையாடியில் கலெக்டர் ஆய்வு