×

பெண்ணுக்கு கொலைமிரட்டல் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை: அரியலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு

 

அரியலூர், ஆக. 2: கருவிடைச்சேரி கிராமத்தில் பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அரியலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டது. அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் அருகே உள்ள கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிமுத்து மகன் இளையராஜா(37). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின், விசாரணை அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு சாட்சிகளையும் விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, குற்றவாளி இளையராஜாவுக்கு மூன்று ஆண்டுகள் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, இளையராஜா திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

 

The post பெண்ணுக்கு கொலைமிரட்டல் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை: அரியலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur Magla Court ,Ariyalur ,Karavidacheri ,PALANIMUTHU ,KARAVIDITCHERI VILLAGE ,KALAPPUVOOR ,ARIYALUR DISTRICT ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்