×

முதல்வர் திறந்து வைத்தார் ரூ.1.32 கோடியில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு அலுவலகம்

விருதுநகர், ஆக.1: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1.32 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன்பின், எஸ்பி கண்ணன் முன்னிலையில் கலெக்டர் சுகபுத்ரா கட்டிடத்தில் குத்து விளகேற்றி மரக்கன்று நட்டு வைத்தார்.

கலெக்டர் கூறுகையில், விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்திருப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மதுரை சரக தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு டிஎஸ்பி கிருஷ்ணராஜ், விருதுநகர் டிஎஸ்பி லோகேஷ்குமார், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்
வாளர் மகேந்திரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

The post முதல்வர் திறந்து வைத்தார் ரூ.1.32 கோடியில் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு அலுவலகம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Chief Minister ,MLA ,Virudhunagar Collector ,Office Complex ,K. Stalin ,SP Kannan ,Sukabutra ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு