×

கந்தர்வகோட்டை அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி

 

கந்தர்வகோட்டை, ஆக.2: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வளவம்பட்டி ஊராட்சி ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த அப்பாதுரை மகன் சங்கர்(47). கூலி தொழிலாளி. திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளது. இவர் நேற்றிரவு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு சென்ற லாரி வளவம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சங்கர் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆதனக்கோட்டை போலீசார் உடலை கைபற்றி புதுக்கோட்டை அரசு மருந்துவக்கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Kandarvakottai ,Shankar ,Appadurai ,Adi Dravidar Street ,Valavampatti Panchayat ,Kandarvakottai taluka, ,Pudukkottai district ,Pudukkottai ,Thanjavur ,Valavampattu ,Athanakottai ,
× RELATED ஓய்வூதியர் தின விழா