- ஒரத்தநாடு
- ரெங்கராஜ்
- தளிகை தன்சாலா
- திருவனம்
- தஞ்சாவூர் மாவட்டம்
- ராம்குமார்
- முன்னுமாங்கொல்லை
- தளிகை தன்சாலா கிராமம்
- திருவோணம் காவல் துறை
ஒரத்தநாடு, ஆக.1: தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள தளிகை விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ், இவரது மகன் ராம்குமார் வயது (34) என்பவர் மூணுமாங்கொல்லையில் இருந்து தளிகை விடுதி கிராமத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சாலை வளைவில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பலகை குறியீட்டில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ராம்குமாரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
