×

முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை சார்பில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்

 

முத்துப்பேட்டை, ஜூலை 30: முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சார்பில், கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை வனிதா தலைமை வகித்தார். இதில் அரசு சித்த மருத்துவர் டாக்டர் பிரியதர்ஷினி கலந்துக்கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

மேலும் அனைத்து மாணவிகளுக்கும் நினைவாற்றல் அதிகரிக்க வல்லாரை மாத்திரை, இரும்பு சத்து மாத்திரைகள், மாதவிடாய் கோளாறுகள் சரி செய்யும் டானிக், நெல்லிக்காய் இலேகியம் ஆகியவை வழங்கப்பட்டது. மாணவிகள் ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர். இதில் ஆசிரியைகள் உட்பட பலரும் கலந்துக்கொண்ட நிலையில் பள்ளி உடற்கல்வி ஆசிரியை அனிதா நன்றி கூறினார்.

Tags : Muthupet Government Hospital ,Siddha Medical Awareness Camp ,School ,Muthupet ,Kovilur Arulmigu Periyanayaki Ambal Government Girls Higher Secondary School ,Siddha Medical Unit ,Vanitha ,Government Siddha ,Medical Doctor ,Dr. ,Priyadarshini ,
× RELATED ஓய்வூதியர் தின விழா