×

வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி: அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்

நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் தமிழகத்தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இன்று அளித்த பேட்டி: வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மகத்தான தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்தமிழகத்திற்கு தொழில் வளர்ச்சியை உறுதி செய்துள்ளார். தென்காசி மாவட்டத்திற்காக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட சிப்காட் இடத்தை தேர்வு செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளேன். மேலும், நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் வர உள்ளன. ​

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டைடல் பார்க்குகள் மூலமாக புதிய நியோ டைடல் பார்க்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தின் முதல் நியோ டைடல் பார்க் அமைக்கும் பணி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது என்றார்.

The post வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி: அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,TRP Raja ,Nellai ,Tamil ,Nadu ,Industries ,Palayankottai KTC Nagar, Nellai district ,Chief Minister ,M.K. Stalin ,South Tamil Nadu ,Minister TRP Raja ,
× RELATED ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் –...