- மதுரை
- அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களின் உரிமைகளுக்கான சங்கம்
- திருவள்ளுவர்
- மதுரை கலெக்டர்
- மாவட்ட செயலாளர்
- பாலமுருகன்
- உதவித் தலைவர்
- ராஜேந்திரன்
- தின மலர்
மதுரை, ஜூலை 25: மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பாக, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலமுருகன், உதவி தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இணைச்செயலாளர் குமரவேல், துணை மேயர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிககள் பாரதி, மாரியப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதிச்சியம் வடக்கு 1வது தெருவில் உள்ள 200 குடியிருப்புகள் 70 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப் பாதையை மககள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷங்களை எழுப்பினர்.
The post மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
