நெல்லை, ஜூலை 22: இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் மாணவ மாணவிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மானூர் தாலுகாவில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க 2021ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு தொடங்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் அதிகம் படிக்கிற இந்த அரசு கல்லூரியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி தொடங்கப்பட்டும் கட்டிடம் இல்லாமல் மேலபிள்ளையார்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.இரும்பு கொட்டகையில் போதிய பேருந்து வசதி இல்லாமல் அந்த அரசு கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி ஒரு மாதம் ஆகியும் புதிய கட்டிடம் திறக்கப்படாமல் பழைய பள்ளி கட்டிடத்திலேயே கல்லூரி செயல்பட்டு வருகிறது. எனவே புதிய கல்லூரி கட்டிடத்தை உடனடியாக திறந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டை முன்னேற்ற வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மானூர் அரசு கல்லூரி புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும் appeared first on Dinakaran.
