×

எடப்பாடி, அண்ணாமலை இடையே யார் ஏமாளி என்பதை பங்கு பிரிப்பதில் பிரச்னை: அமைச்சர் சிவசங்கர் கிண்டல்

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முன்னேற்பாடு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: நாங்கள் ஏமாளிகள் அல்ல, அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமியும், நாங்களும் ஏமாளிகள் அல்ல என பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கூறி உள்ளனர். அவர்களுக்குள் யார் ஏமாளி என்பதில் பங்கு பிரிப்பதில் பிரச்னையா என தெரியவில்லை. தற்போது இந்த நாடகத்தை தொடங்கி இருக்கிறார்கள். உச்சக்கட்டத்தை தொடும் போது என்னவென்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post எடப்பாடி, அண்ணாமலை இடையே யார் ஏமாளி என்பதை பங்கு பிரிப்பதில் பிரச்னை: அமைச்சர் சிவசங்கர் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Annamalai ,Minister ,Sivasankar Kindal ,Ariyalur ,Maman Rajendra Chozhan ,Chozhapura Pragadishwarar temple ,Gangaigonda ,Jayankondam ,Minister of Transport Department ,Cha. C. Sivashankar ,Edapadi ,Dinakaran ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...