- போலீஸ் பிரிவு
- மதுரை
- தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு
- தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு 6வது அணி
- புதுநத்தம் சாலை
- சிறப்பு காவல் பிரிவு
- தின மலர்
மதுரை, ஜூலை 21: மதுரையில் நாளை மறுநாள் தமிழ்நாடு சிறப்புக்காவல் பிரிவில் கழிவு வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகின்றன. இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சிறப்புக்காவல் 6ம் அணி, மதுரை புதுநத்தம் ரோட்டில் உள்ள அலுவலக வளாகத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் உள்ளன. இவற்றை பொது ஏலத்தில் விட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான பொது ஏலம் நாளை மறுநாள் (ஜூலை 23) காலை 10 மணிக்கு தமிழ்நாடு சிறப்புக்காவல் 6ம் அணி, மதுரை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதன்படி ஏலம் விடப்படும் போலீஸ் வாகனங்கள் தமிழ்நாடு சிறப்புக்காவல் 6ம் அணி, அலுவலக வளாகத்தில் 21ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை, இதில் பங்கேற்க விரும்புவோரின் பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் 23ம் தேதி காலை 7 மணிக்குள் ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகையை செலுத்தி, தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்த பிறகு ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து உரிய தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post சிறப்புக்காவல் பிரிவின் கழிவு வாகனங்கள் பொது ஏலம்: நாளை மறுநாள் நடக்கிறது appeared first on Dinakaran.
