×

உலக சாம்பியன்ஷிப் தொடர் இந்தியா – பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் டி20 ரத்து: தவான், ரெய்னா எதிர்ப்பு எதிரொலி

பர்மிங்காம்: கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்கள் மோதும், உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடரில், இந்திய வீரர்கள் ஆட மறுத்ததால், பாகிஸ்தானுடனான போட்டி ரத்து செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும், 2வது உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் மோதுகின்றன.

இத்தொடரில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி பர்மிங்காமில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பாக குற்றம் சாட்டியும், பாகிஸ்தான் அணியுடன் விளையாட முடியாது என, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கூறினர். இதனால், அப்போட்டி ரத்து செய்யப்பட்டது.

The post உலக சாம்பியன்ஷிப் தொடர் இந்தியா – பாகிஸ்தான் லெஜண்ட்ஸ் டி20 ரத்து: தவான், ரெய்னா எதிர்ப்பு எதிரொலி appeared first on Dinakaran.

Tags : World Championship Series India ,Pakistan Legends T20 ,Dhawan ,Raina ,Echo ,Birmingham ,World Championship of Legends T20 Series ,Pakistan ,2nd World Championship of Legends T20… ,Legends T20 ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...