×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சீமான் நேரில் சந்திப்பு: மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மு.க.முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் கூறினார்.

மேலும், தமிழ்நாடு மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன், மகளிர் அணி தலைவி ஸ்டெல்லா, வர்த்தகர் அணி செயலாளர் ஜாகீர், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், அவரது மனைவி மல்லிகா சீனிவாசன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

முதல்வரை சந்தித்த பின்னர் சீமான் அளித்த பேட்டியில், “மு.க.முத்து மறைவுக்கு நேற்று அஞ்சலி செலுத்த முடியாததால், இன்று முதல்வரை சந்தித்து இரங்கல் தெரிவித்தேன். கொள்கை, கோட்பாடு வேறாக இருந்தாலும், மனித மாண்பை காக்க ேவண்டும். அதிமுக-பாஜ கூட்டணி ஆட்சி பற்றி என்னால் கருத்து கூற முடியாது. அது அவர்களுடைய விருப்பம். தவெக தலைவர் விஜய்யுடன் ஒத்த கருத்து, ஒரே நோக்கம் இருக்கும் என நினைத்தேன். ஆனால், பாதை மாறிவிட்டது. விஜய்யுடன் ேபச வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சீமான் நேரில் சந்திப்பு: மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. Seaman ,Stalin ,BC K. ,Chennai ,Mudhalvar Mu ,K. ,chief coordinator ,Seaman ,Prime ,Minister ,House ,Alvarpet, Chennai ,M. K. Seaman ,Tamil Nadu ,BC ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்