×

நாகமலை அருகே வாலிபர் வெட்டிக் கொலை

திருப்பரங்குன்றம், ஜூலை 19: மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே வடபழஞ்சியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதியில் நேற்று காலை சுமார் 30 வயதுள்ள ஆணின் உடல் முகம், கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காயங்களுடன் கிடந்தது. அருகில் சில மது பாட்டில்களும் காணப்பட்டன. தகலறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர்.

இதில் கொலையானவர் முத்துப்பட்டியை சேர்ந்த சின்னபாண்டி மகன் கருப்பசாமி(27) என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து சென்ற இவர், நண்பர்களுடன் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யபட்டாரா அல்லது முன் விரோதம் காரணமாக திட்டமிட்டு நடந்த கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாகமலை அருகே வாலிபர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Valibur Vetik ,Nagamala ,Thirupparangundaram ,Government Upper Secondary School ,Vadapuanchi ,Nagamalai Pudukkottai ,Madurai ,Nagamalai ,
× RELATED ஓய்வூதியர் தின விழா