×

திருக்குறளில் பிழை ஆளுநருக்கு தொடர்பில்லை டாக்டர் விளக்கம்

கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கடந்த 13ம் தேதி சென்னை ராஜ்பவனில் மருத்துவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் மூத்த மருத்துவ நிபுணர்களுக்கு திருக்குறள் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த கேடயத்தில் திருக்குறளில் பிழை இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விழாவை ஒருங்கிணைத்த கோவை விஜிஎம் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் பிரசாத் கூறுகையில், ‘திருக்குறள் பிழைக்கு நாங்கள் தான் முழுப் பொறுப்பு. ஆளுநருக்கோ அல்லது ராஜ்பவனுக்கோ இந்த பிழை குறித்து எதுவும் தெரியாது. தொடர்பும் கிடையாது. இந்த நினைவு பரிசுகளில் சரியான திருக்குறள் பொறிக்கப்பட்டு மீண்டும் அது அவர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பிழைக்கு முழுப் பொறுப்பேற்று ஆளுநருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளோம். இந்த எதிர்பாராத பிழைக்காக நான் வருந்துகிறேன். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகிறேன்’ என்றார்.

The post திருக்குறளில் பிழை ஆளுநருக்கு தொடர்பில்லை டாக்டர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,Coimbatore ,National Doctors' Day ,Governor ,R.N. Ravi ,Raj Bhavan ,Chennai ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...