சென்னை: திருப்பரங்குன்றம், காந்தி பெயர் நீக்கம் குறித்து எதுவும் பேசாமல் விஜயின் ஈரோடு ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாக தி.வி.க. விமர்சித்துள்ளது. நிகழ்கால பாஜக அரசியல் குறித்து ஒரு எதிர்ப்பையும் விஜய் தெரிவிக்கவில்லை என விடுதலை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜகவின் தொங்குசதை தான் தவெக என்பதை விஜய் வழியாகவே அம்பலப்படுத்திவிட்டனர். கொள்கை எதிரி, அரசியல் எதிரி இரண்டுமே திமுகதான் என்று விஜயை பேச வைத்துள்ளனர்.
அமித் ஷாவுக்கு பதிலாக விஜயை பேச வைத்துள்ளனர்
முதலமைச்சரின் பதிலடிக்கு அமித் ஷாவுக்கு பதிலாக விஜய்யை பேச வைத்துள்ளார்கள். பொருளாதாரம், கல்வி, ஏற்றுமதி, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பெற்று நிற்கிறது. ஒன்றிய அரசாலும், ரிசர்வ் வங்கியாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைகள் விஜய்க்கு தெரியாது. விஜய் அரசியலை திமுக கண்டு கொள்வதே இல்லை; விஜய் பெயரைக் கூட முதலமைச்சர் உச்சரித்ததே இல்லை. ஏதோ தங்கள் கட்சியைப் பார்த்து மிரண்டு நிற்பதாக வசனம் எழுதி கொடுத்து விஜயை பேச வைத்துள்ளனர் என விமர்சித்தார்.
