×

விக்கிரமங்கலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

 

தா.பழூர், ஜூலை 14: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை வீட்டில் தனியாக இருந்த போது, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சைக்காக ஜெயங்கொண்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

The post விக்கிரமங்கலம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vikramangalam ,Tha.Pazhur ,Udayakumar ,Muthuvancheri North Street ,Ariyalur district ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...