×

சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மூதாட்டி பலி

சென்னை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அனு பொருச் (65). உடல் நலம் பாதித்த நிலையில், அனு பொருச்சை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, அனு பொருச் தன் மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் கவுகாத்தியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். இரவு 9.25 மணியளவில், ஐதராபாத் செல்லும் விமானத்தில், புறப்படுவதற்கு தயாராகினர்.

அப்போது அனு பொருச் திடீரென்று நெஞ்சு வலியால் துடித்தபடி மயங்கி விழுந்தார். விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு 10 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அனு பொருச் உயிரிழந்ததாக விமான நிலைய மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீசார் இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Anu Poruch ,Assam ,Hyderabad ,Guwahati… ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு