×

அம்மன் கோயில் களரி விழாவில் 5 ஆயிரம் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

 

பரமக்குடி, ஜூலை 8: வளையனேந்தல் கருமேனி அம்மன் கோயில் களரி விழாவில் 5 ஆயிரம் தேங்காய் உடைத்து வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர்.பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் கிராமத்தில் ஆண்டுதோறும் கருமேனி அம்மன் ஆலய களரி விழா நடைபெறும். நேற்று முன்தினம் முதல் நாள் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் அம்மனுக்கு பலியிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து நேற்று இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கரகப் பானை மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். இதன் முக்கிய நிகழ்வாக மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தேங்காய் உடைத்து வேண்டுதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

The post அம்மன் கோயில் களரி விழாவில் 5 ஆயிரம் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Amman temple Kalari festival ,Paramakudi ,Kalari festival of Karumeni Amman temple ,Vayanendal ,coconuts ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு