×

திருகாட்டுப்பள்ளி அருகே பைக் மினி பஸ் மோதல்

 

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 8: திருக்காட்டுப்பள்ளி அருகே பைக்கில் சென்றவர் மீது மினி பஸ் மோதியதில் தடுமாறி விழுந்த மூதாட்டி இறந்தார். திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் இருந்து ஐம்பதுமேல் நகரம் ரோட்டில் வரகூர் மாதா கோயில் தெரு வழியாக பழைய குடியான தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி செல்லாயி என்ற செல்லம் (53) என்பவர் பைக்கில் உதவி கேட்டு 100 நாள் வேலைக்கு செல்ல பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்திசையில் இருந்து வந்த மினி பஸ் பைக் மீது மோதியது. இதில் மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். செல்லம், மூதாட்டி படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்ததனர். மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜா வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post திருகாட்டுப்பள்ளி அருகே பைக் மினி பஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : Thirukattupalli ,Varakoor ,Aimpathumel Nagaram Road ,Varakoor Mata Koil Street ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு