×

என் பேரைச் சொன்னவுடன் ‘‘போனை வை நைனா’’ என்கின்றனர்; மாநில தலைவருக்கு நிர்வாகிகள் வணக்கம்கூட தெரிவிப்பதில்லை: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு


சென்னை: கட்சியின் நிர்வாகிகள் பாதிபேர் மாநில தலைவருக்கு வணக்கம் கூட சொல்வதில்லை என்று நயினார் நகேந்திரன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தில் உள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பூத் வலிமைப்படுத்தும் பயணம் மற்றும் மாநில பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டமன்ற உறுப்பினர் வானதி னிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா மற்றும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக சென்று வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பாஜக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பிரச்சாரம், பெண்களின் பிரதிநிதித்துவம், தெருமுனை கூட்டங்கள், சமூக ஊடக பரப்புரை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெறும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நம்முடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தல் அல்ல 2029 இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் தான் நமக்கு முக்கியம் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக 40 அல்லது 50 இடங்களில் நிச்சயமாக வெற்றி மாலை சூடுவோம், முருகர் பக்தர் மாநாடு யாரும் எதிர்பார்க்காதது.

தமிழகத்தில் தினம்தோறும் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 24 லாக்கப் டெத் நடைபெற்றுள்ளது. செல்போனில் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் நம்முடைய கட்சியில் பாதி பேர் வணக்கம் கூட சொல்வதில்லை, எடுத்தவுடன் சொல்லுங்கள் என கூறுகின்றனர். வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு கொண்டால் என்னை தெரியவில்லை என்றே கூறுகிறார். கடலூரை சேர்ந்த பெண் நிர்வாகியை தொடர்பு கொண்ட நான் நயினார் நாகேந்திரன் என கூறிய போது அவர் என்னை அவர்களுடைய நைனா என நினைத்து விட்டார் போல என்னை ஒழுங்கா இருந்துக்கோ என கூறி போனை வைத்து விட்டார் என வேதனை தெரிவித்தார்.

மேலும் கட்சியின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேச வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எழுதிக் கொடுத்த துண்டுச்சீட்டை வாங்கிய பிறகு அது குறித்து பேச மறுத்து வேறு டாப்பிக்குக்கு மாறினார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

The post என் பேரைச் சொன்னவுடன் ‘‘போனை வை நைனா’’ என்கின்றனர்; மாநில தலைவருக்கு நிர்வாகிகள் வணக்கம்கூட தெரிவிப்பதில்லை: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Pon Vai Naina ,Nayinar Nagendran ,Chennai ,Tamil Nadu Bharatiya Janata Party ,SRM University Art Gallery ,Kattangulam, Chengalpattu District ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்