×

நீடாமங்கலம் அரசுப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

 

நீடாமங்கலம், ஜுன் 30: நீடாமங்கலம் அருகே அகரப் பொதக்குடி அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீடாமங்கலம் ஒன்றியம் அகரப் பொதக்குடி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் இ ராஜலெட்சுமி தலைமை தாங்கினார் .பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ரேவதி முன்னிலை வகித்தார்.
கணிதப் பட்டதாரி ஆசிரியர் சுந்தரி வரவேற்புரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் வெர்ஜினியா கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருளின் தீமைகள் குறித்தும், மாணவர்கள் பாதுகாப்பு குறித்தும், செல்போனை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், டிவியில் சீரியல் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
இறுதியில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நித்யா நன்றி கூறினார்.

The post நீடாமங்கலம் அரசுப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Needamangalam Government School ,Needamangalam ,Akarap Pothakudi Government School ,Drug Eradication Day ,Akarap Pothakudi Panchayat Union Government Middle School of Needamangalam Union… ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு