×

மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை பெண்கள் அணி வெற்றி

 

கோவை, ஜூன் 20: தமிழ்நாடு கிரிகெட் சங்கம் சார்பாக மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் பிரிவினருக்கான போட்டி கோவையில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி கோவை மற்றும் திருப்பூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸில் வென்ற கோவை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 36 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை அணி சார்பாக பந்து வீசிய காவியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெய்ரூபா மற்றும் மதுமிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நடாஷா மற்றும் ஸ்வேதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாவதாக பேட்டிங் செய்த கோவை மாவட்ட அணி 18.1 ஓவரிலேயே விக்கெட் ஏதும் இழக்காமல் 73 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

The post மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவை பெண்கள் அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Coimbatore women's team ,Coimbatore ,Tamil Nadu ,Tamil Nadu Cricket Association ,Tiruppur ,Inter- ,Coimbatore women's ,Dinakaran ,
× RELATED துடியலூரில் கிரேஸ் ஏஜி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா