கோவை, ஜன. 5: கோவை ஆர்எஸ் புரம் போலீசாருக்கு அங்குள்ள மகளிர் பள்ளி அருகே புத்தக கடையில் தடையை மீறி சிகரெட் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று புத்தக கடையில் சோதனை செய்தனர். அதில் கடையில் சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் கடை வியாபாரி சிவகங்கையை சேர்ந்த மாணிக்கம் (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
