×

நாகப்பட்டினம் நகர்மன்ற கூட்டம் அடிப்படை பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை

 

நாகப்பட்டினம், ஜூன் 14: நடப்பு ஆண்டில் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விவசாயிகள் வாழ்வில் வளம் பெற செய்த முதல்வருக்கு நாகப்பட்டினம் நகராட்சியில் நன்றி தெரிவிக்கப்பட்டது. நாகப்பட்டினம் நகர்மன்ற கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி ஆணையர் லீனாசைமன், துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பரணிகுமார், கவிதாகிருஷ்ணமூர்த்தி, தமயந்தி, அண்ணாதுரை, ஜோதிலட்சுமி, ஞானமணி மற்றும் முகமது நத்தர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து ெகாண்டனர். குடிநீர் வழங்கல், சாலைவசதி, சுகாதார வசதி, கழிவு நீர் அகற்றுதல், தெருவிளக்குகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் குறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.

The post நாகப்பட்டினம் நகர்மன்ற கூட்டம் அடிப்படை பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam Municipal Council ,Nagapattinam ,Nagapattinam Municipality ,Chief Minister ,Mettur Dam ,Delta district ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு