×

தஞ்சாவூர் அருகே ரேஷன் கடையில் சாரப்பாம்பு

 

தஞ்சாவூர், ஜூன் 13: ரேஷன் கடையில் புகுந்தசார பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தஞ்சை அடுத்த சீனிவாசபுரம் பகுதியில் ஒரே கட்டடத்தில் மூன்று ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்தினம் மாலை ரேஷன் கடையில் பணியாற்றுபவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று காலை பணிக்கு வந்து ரேஷன் கடையை திறந்து உள்ளார். அப்போது முதல் கடையில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சார பாம்பு இருந்தது தெரிய வந்தது.

இதை எடுத்து கடையின் பணியாளர் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்ட அலுவலர் குமார் அறிவுறுத்தலின் பேரில் நிலை அலுவலர் போக்குவரத்து கணேசன் தலைமையில் தீயணைப்பு குழுவினர் பாலசுப்பிரமணியம், கற்பகராஜ், செல்லதுரை சிறப்பு நிலை அலுவலர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விந்து வந்து லாவகமாக பாம்பை பிடித்தனர். மேலும் பிடிக்கப்பட்ட அந்த பாம்பை வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

The post தஞ்சாவூர் அருகே ரேஷன் கடையில் சாரப்பாம்பு appeared first on Dinakaran.

Tags : Snake ,Thanjavur ,Srinivasapuram ,Dinakaran ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு